சரணகோஷம் ஏன் உரத்த குரலில் எழுப்ப வேண்டும்?
ADDED :3715 days ago
அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று சரண்கோஷமாக ஐயப்பன் திருநாமங்களைச் சொல்லும் போது கவனம் திசை திரும்பாது. அந்த ஒலி அலைகள் அந்த இடம் முழுக்கப் பரவி பக்தி அதிர்வை ஏற்படுத்தும் வீட்டில் இருப்பவர்கள். மற்ற சிந்தனைகளுடனோ அல்லது வேறு பேச்சுகளிலோ இருந்தால் அவர்களது கவனமும் ஐயப்பனைப்பற்றிய எண்ணத்தில் திரும்பும் இன்னொரு நன்மை கோஷங்களை உரக்கச் சொல்வதால் குளிர்ச்சியால் ஏற்படும். தொண்டைக்கட்டு வராது. பனிக்காலத்தில் வரக்கூடிய சளித்தொல்லை சுவாசக் கோளாறுகள் வராது.