உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்ப சுவாமி கோவில்களில் நவ., 23ல் கும்பாபிேஷகம்!

ஐயப்ப சுவாமி கோவில்களில் நவ., 23ல் கும்பாபிேஷகம்!

உடுமலை: பாலப்பம்பட்டி சபரி ஐயப்பன் கோவில், பெரியபட்டி ரங்கமாபாளையம் ஐயப்பசாமி – நாகராஜா கோவில்  கும்பாபி ேஷகம் நவ., 23ல் நடக்கிறது. உடுமலை, பாலப்பம்பட்டியில் சபரி ஐயப்பன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில், கன்னிமூல கணபதி, மஞ்சள் மாதா, நாகராஜர், நவக்கிரக நாயகர், கருப்பண்ணசுவாமிகளுக்கு, தனித்தனியாக சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. கும்பாபிேஷ விழா, இன்று மாலை, 4:30 மணிக்கு, விக்ரகம், முளைப்பாரி, தீர்த்திக்குட வீதியுலாவுடன் துவங்குகிறது. இரவு, 8:00 மணிக்கு, பக்தி இன்னிசை நடக்கிறது. நவ.,23ம் தேதி அதிகாலை, 4:30 மணி முதல் காலை, 7:00 மணி வரை, திருப்பள்ளி எழுச்சி, திக்பாலர், யாகசாலை பூஜை, வேள்வி யாகம், கலசபூஜை, உபச்சார பூஜை, இரண்டாம் கால யாக பூஜையும் நடக்கிறது. காலை, 7:30 மணிக்கு, மகா கும்பாபிேஷகமும், 8:00 மணிக்கு, மகா அபிேஷகம், அலங்காரம், தீபாராதனையும், 8:30 மணிக்கு, அன்னதானமும் நடக்கிறது.

உடுமலை பெரியபட்டி, ரங்கமாபாளையம் முத்துமாரியம்மன் கோவில் அருகில், ஐயப்பசாமிக்கு புதிய கோவில் கட்டப்பட்டு கும்பாபிேஷகம், நவ., 23ம் தேதி நடக்கிறது. இதற்கான விழா, நாளை மாலை, 6:10 மணிக்கு, துவங்குகிறது. நவ., 23ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, இரண்டாம்கால யாக பூஜையும், 6:30 மணிக்கு, நாடிசந்தானம், மகா பூர்ணாகுதியும், 7:00 மணிக்கு, கோபுர கும்பாபிேஷகமும், 7:30 மணிக்கு, ஐயப்பசாமி, நாகராஜாவுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு, மகா அபிேஷகம், மகா தீபாராதனை நடக்கிறது.

மடத்துக்குளம்: மடத்துக்குளம் கழுகரை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம், வரும் 23ம் தேதி நடக்கிறது. மடத்துக்குளம் அருகே, கழுகரையில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்அமைந்துள்ளது. இந்தக்கோவிலில் கும்பாபிேஷக விழா, நவ.,23 ம்தேதி, காலை, 6:00 முதல், 7:25 மணிக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழா நாளை மாலை, 4:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது.  தொடர்ந்து நவக்கிரக ஹோமம் நடக்கிறது. நவ.23 ம்தேதி அதிகாலை, 5;00 மணிக்கு புண்யயாகம், மண்டபார்ச்சனை, காயத்ரியாகம், மகாபூர்ணாகுதி, 6:30 மணிக்கு கலசங்கள் உலா வருதல், 6:35 முதல் 7:25 மணிக்குள் கோபுரம், விநாயகர், சிவன், ராமலிங்கசவுடேஸ்வரி அம்மன், காமாட்சி அம்மன், தட்சிணாமூர்த்தி, கருப்பண்ணசாமி ஆகிய சாமிகளுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.  தொடர்ந்து, தீபாராதனை, சிறப்புபூஜை நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !