தி.மலை அண்ணாமலையார் கோவிலில் மஹா ரத தேரோட்டம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில், முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, மஹா ரத தேரோட்டம் நேற்று நடந்தது.
காலை, 6:45 மணிக்கு, விநாயகர் தேரோட்டம் துவங்கியது. தொடர்ந்து, முருகன் தேர், 9:45 மணிக்கு வடம் பிடிக்கப்பட்டு, 1:45 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இதையடுத்து, மதியம், 2:12 மணிக்கு, மஹா ரத தேரோட்டம் துவக்கி வைக்கப்பட்டது. அப்போது, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் செல்லும் மாட வீதிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. வரும், 25ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.