உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாராயண பெருமாள் கருடசேவை உற்சவம்

நாராயண பெருமாள் கருடசேவை உற்சவம்

விழுப்புரம்: பவுர்ணமியை முன்னிட்டு சிறுவந்தாடு லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் நடந்தது. விழாவை யொட்டி கடந்த 25ம் தேதி காலை 9:00 மணிக்கு மூலவர் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதனை தொடர்ந்து மூலவர் புஷ்பம், துளசியால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் கனகவல்லி தாயாரோடு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் கருட வாகனத்தில் கோவில் உள் புறப்பாடு நடந்தது. விழா ஏற்பாடுகளை பட்டாச்சாரியர்கள் பத்திரி, பார்த்தசாரதி மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !