கோட்டை பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம் துவக்கம்
ADDED :3592 days ago
சேலம்: கோட்டை அழகிரிநாதர் ஸ்வாமி கோவிலில், சொர்க்கவாசல் திறப்பையொட்டி, பகல்பத்து உற்சவ விழா, நேற்று துவங்கியது. சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, வரும், 21ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, நேற்று முதல், டிச., 20ம் தேதி வரை, பகல் பத்து உற்சவம் நடக்கிறது. இதில், தினமும் காலை, 5 மணிக்கு, அழகிரிநாத ஸ்வாமி, மண்டபத்தில் எழுந்தருளல், திருமொழி வேதபாராயணம் சேவித்தல், திருவாராதனம், தீபாராதனை, திருக்கொட்டாரத்தில் பக்தி உலாவுதல், ஆஸ்தானம் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடக்கும். டிச., 21 முதல் ஜன.,1ம் தேதி வரை, ராப்பத்து உற்சவம் கடைபிடிக்கப்படும். அதில், முதல் நாளன்று, சொர்க்கவாசல் திறக்கப்படும். அப்போது, ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர்.