மேல்மருவத்துார் சித்தர் பீடத்தில் ரூ.30 லட்சத்தில் நிவாரணம்
மேல்மருவத்துார் : மேல்மருவத்துார், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில்குமார் நேற்று வழங்கினார். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில்குமார் பிறந்த நாள் விழாவையொட்டி, ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆதிபராசக்தி அம்மனுக்கு, அதிகாலை, 3:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது. அதை தொடர்ந்து, பங்காரு அடிகளார், லட்சுமி பங்காரு அடிகளார், அன்பழகன் ஆகியோரிடம் செந்தில்குமார் வாழ்த்துக்களை பெற்றார். இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், கல்வி உதவித்தொகையையும்; முதியோர் இல்லங்களுக்கு, உணவு பொருட்கள், துணி ஆகியவற்றையும் வழங்கினார்.இந்த நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று வழங்க, பக்தர்கள் மூலம், வாகனங்களில் பொருட்களை அனுப்பி வைத்தனர்.