உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு!

சென்னை: வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று (டிச.21) அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான  சொர்க்க வாசல் திறப்பு அதி காலை நடைபெற்றது. வைனவ தலங்களில் பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடிய திவ்யபிரபஞ்ச திருவாய் மொழிகளை பகல்பத்து மற்றும் ராபத்திலும் பாடி பகவானை அழைப்பது ஐதீகம். பகல்பத்து முடிந்து இராபத்து துவங்கும் முதல்நாளில் நாலாவது ஆயிரத்தில் நம்மாழ்வார் திருவாய் மொழிந்த திவ்வயபிரபஞ்சத்தை கேட்டு ஜீவராசிகளுக்கு மோச்சத்தை வழங்க ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களுடன் பரமபத வாசல் வந்த பெருமாளை காண நான்கு மாடவீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !