உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

சேலம் பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

சேலம்: வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, சேலத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று, அதிகாலை முதல், பொதுமக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்வாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களின் "கோவிந்தா, கோவிந்தா” கோஷம் விண்ணை பிளந்தது. பள்ளிக்கொண்ட பரந்தாமனுக்கு பிடித்த மாதமாக கருதப்படுவது மார்கழி. மற்ற மாதங்களில் வரும் ஏகாதசி விழாவை காட்டிலும், மார்கழி மாதம் வளர்பிறையில் வரும், ஏகாதசி விழா சிறப்பானது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சேலம், கோட்டை அழகிரி நாதர் கோவிலில், நேற்று காலை, 5 மணிக்கு உற்சவ மூர்த்தி, பரமபதவாசல் வழியாக வரும் நிகழ்ச்சி நடந்தது. அதேபோல் செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், செவ்வாய்பேட்டை ருக்மணி பாண்டுரெங்கநாதர் கோவில், சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள லட்சுமி நாராயண ஸ்வாமி கோவில், பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோவில், அம்மாபேட்டை சவுந்தரராஜப் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.ஆயிரக்கணக்கான பக்தர்கள், காலையில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில், நேற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !