தீவனூர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
ADDED :3577 days ago
திண்டிவனம்: தீவனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. திண்டிவனம் அருகே உள்ள தீவனூரில் பழமை வாய்ந்த லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், மார்கழி மாதம் துவங்கியதை முன்னிட்டு, அன்று காலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 7 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி, நேற்று காலை 5:30 மணிக்கு நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா முனுசாமி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.