உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கமா முனியப்பன் கோவில் திருவிழா

செங்கமா முனியப்பன் கோவில் திருவிழா

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையம் செங்கமா முனியப்பன் கோவில் திருவிழா துவங்கியது. குமாரபாளையம் அடுத்தள்ள பல்லக்காபாளையத்தில், செங்கமா முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி முனியப்ப சுவாமிக்கு, தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்து வருகிறது. வரும், 31ம் தேதியன்று உற்சவ பெரும் பூஜையும், அபிஷேகமும் நடக்கிறது. ஜனவரி, 1ம் தேதியன்று, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தகுட ஊர்வலம் மற்றும் முனியப்ப சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. ஜனவரி, 2ம் தேதி பொங்கல் விழாவும், 3ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !