உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துவங்கியது பழநி பாதயாத்திரை :காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்!

துவங்கியது பழநி பாதயாத்திரை :காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்!

பழநி: பவுர்ணமியை முன்னிட்டு பழநிகோயிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். சபரிமலை சீசன், மார்கழியை முன்னிட்டு பழநி மலைக் கோயிலுக்கு வெளியூர் ஐயப்ப, முருக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பவுர்ணமி மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவே பக்தர்கள் குவிந்ததால் கோயில் தங்கும்விடுதிகள், தனியார் லாட்ஜ்கள் நிரம்பின.பவுர்ணமியை முன்னிட்டு, அதிகாலை மற்றும் மாலைநேரங்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த 200க்கு மேற்பட்ட பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.ரோப்கார் ,வின்ச் ஸ்டேஷன்களில் பக்தர்கள் 2 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து, மலைக்கோயிலுக்கு சென்றனர். பொதுதரிசன வழியில் 4மணி நேரமும், கட்டண தரிசனவழியில் 2 மணிநேரமும் வரை காத்திருந்து மூலவர் ஞான தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !