உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை முருகன் கோவிலில் மாடுகளுக்கு கோசாலை

சென்னிமலை முருகன் கோவிலில் மாடுகளுக்கு கோசாலை

சென்னை: ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோவிலில், நான்கு லட்சம் ரூபாய் செலவில், கோசாலை அமைக்கப்பட்டு உள்ளது.ஆதிபழநி என்று அழைக்கப்படும், சென்னிமலை முருகன் கோவிலில், பக்தர்களால் காணிக்கையாக விடப்பட்ட, 23 மாடுகளும், மலை மீதுள்ள கோவிலுக்கு, படிகள் வழியாக திருமஞ்சனம் கொண்டு செல்லும், மூன்று காங்கேயம் இன காளை மாடுகளும் பராமரிக்கப்படுகின்றன. இந்த மாடுகளை, கோவிலுக்கு சொந்தமான தெப்ப குள கரையில், வெட்ட வெளியில் கட்டி வைத்து பராமரித்த வந்தது கோவில் நிர்வாகம், கடும் மழை, வெயில் காலங்களில், மாடுகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின.கோவில் நிர்வாகம் கோசாலை அமைக்காததால், திருப்பூரை சேர்ந்த பழனிசாமி என்பவர், நான்கு லட்சம் ரூபாயை நன்கொடையாக கொடுத்ததை அடுத்து, புதிய கோசாலை அமைக்கப்பட்டு உள்ளது; மாடுகளை, கொசு, பூச்சி தொந்தரவில் இருந்து பாதுகாக்க, 10 மின் விசிறிகளும் பொருத்தப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !