விநாயகர் கோயிலில் பாவை விழா
ADDED :3767 days ago
தேவகோட்டை: தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் பாவை விழா நடந்தது. செயல் அலுவலர் பாலதண்டாயுதம் தலைமை வகித்தார். திருப்பாவை திருவெம்பாவையை பக்தர்கள் வாசித்தனர். பள்ளி மாணவர்களிடையே ஒப்புவித்தல் போட்டி நடந்தது. சேர்மன் மாணிக்கம் வாசகம் பள்ளி மாணவர்கள் ஒப்புவித்தல் போட்டி, கட்டுரை போட்டிகளில் பரிசு பெற்றனர். தலைமை ஆசிரியர் சீனிவாசன் விளக்கம் அளித்தார். தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், ஆசிரியர் போஸ்,அரசு விடுதி காப்பாளர் சந்திரன், ஆசிரியை முத்துமீனாள் பங்கேற்றனர்.