உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரளயநாதர் சுவாமி கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி

பிரளயநாதர் சுவாமி கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி

சோழவந்தான்: சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி சிவன் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடந்தது. ராகு கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும், கேது மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும் நேற்று மதியம் 12.47 மணிக்கு இடப்பெயர்ச்சி யாகினர். இதை முன்னிட்டு கோயிலில் சிவாச்சாரியார்கள் ரவிச்சந்திரன், பரசுராமர் 12 வகை திரவியங்களால் அபிஷேக, தீபாராதனை செய்தனர். ஏற்பாடுகளை எம்.வி.எம். குழும தலைவர் மணிமுத்தையா, கோயில் நிர்வாக அதிகாரி லதா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !