குன்னூர் குழந்தை ஏசு ஆலய திருவிழா
ADDED :3820 days ago
குன்னுார்: குன்னுார் மாடல் ஹவுஸ் பகுதியில் உள்ள குழந்தை ஏசு சிற்றாலயத்தில், ஆண்டு திருவிழா துவங்கியது. கடந்த, 7ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கி யது. நேற்று துவங்கி, வரும், 13ம் தேதி வரை, தினசரி மாலை, சிறப்பு நவநாள், வழிபாடு நடத்தப்படுகிறது. திருவிழா நாளான, 17ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, நன்றி திருப்பலி நடக்கிறது. பின், தேர்பவனி நடக்கிறது. மதியம் ஒரு மணிக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, பங்கு குரு, பங்கு மக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.