உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சியில் அனுமன் ஜெயந்தி விழா

கள்ளக்குறிச்சியில் அனுமன் ஜெயந்தி விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. கள்ளக்குறிச்சி, சேலம் மெயின் ரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தபின், தங்கக் கவசம் அணிவித்து 108 வடமாலை சாற்றி, பூஜைகள் செய்தனர். அலங்கார தீபங்கள் காண்பித்து மந்திர உபச்சார பூஜைகளும் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். வழிபாடுகளை சங்கர் குருக்கள் செய்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !