உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி சண்முக தீர்த்த குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருத்தணி சண்முக தீர்த்த குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருத்தணி : சண்முக தீர்த்த குளத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைக்கும் பணியில் ரெட்டிகுளம் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். திருத்தணி, பெரிய தெருவில் ரெட்டிகுளம் (எ) சண்முக தீர்த்த குளம் உள்ளது. அந்த குளத்தை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். மேலும், குளத்தை சுற்றியும், முட்புதர்கள் வளர்ந்திருந்தது. திருத்தணி, பெரிய தெரு சுமை துாக்கும் ஊழியர்கள், ரெட்டிகுளம் மீட்பு குழுவினர், நேற்று, ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் குளத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !