மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் செயற்கை நீரூற்று!
ADDED :3656 days ago
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடைபெறுகின்றன. அதன் ஒரு கட்டமாக, கோவில் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில், உபய திருப்பணியாக, இரண்டு பகுதிகளில், செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. குளத்தின் நீராழி மண்டபத்தை சுற்றி, ஆழம் அதிகம் இருக்கும். அங்குள்ள மீன்கள் சுவாசிக்க ஏற்றவாறு, பிராண வாயுவை அதிகப்படுத்தும் விதமாக, செயற்கை நீ ரூற்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக பிரத்யேக மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவில், எல்.இ.டி., விளக்கு பொருத்தப் பட்டுள்ளது. இருபுறமும் இருக்கும் செயற்கை நீரூற்றில் இருந்து வரும் நீரை பார்க்க, அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.