திண்டுக்கல் கோட்டை மாரியம்மனுக்கு ரூ.3.16 லட்சம் காணிக்கை
ADDED :3646 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலைத்துறை <உதவி கமிஷனர், கோயில் நிர்வாக அலுவலர் தலைமையில் காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இப் பணியில் பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். அதில் தங்கம் 28 கிராம், வெள்ளி 190 கிராம், ரொக்கம் ரூ.3 லட்சத்து 16 ஆயிரத்து 360 இருந்தது.