லட்சுமி ஹயக்ரீவர் யாகத்தில் மாணவர்கள் திரளாக பங்கேற்பு
ADDED :3615 days ago
பவானி: பவானி, மைலம்பாடி கிராமத்தில், சுதர்ஸன மடத்தில், லட்சுமி ஹயக்ரீவர் யாகம் நேற்று நடந்தது. அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் பெற வேண்டி, ஆண்டு தோறும் இங்கு லட்சுமி ஹயக்ரீவர் யாகம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் பயிலும் மாணவ, மாணவியர் நலன் வேண்டியும், கல்வி ஞானம் சிறந்து விளங்கவும், அதிக மதிப்பெண் பெறவும் யாகம் நடந்தது. ஏற்பாடுகளை கருடகிரி நரசிம்ம சுவாமி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். பவானி, அந்தியூர், அம்மாபேட்டை பகுதி மாணவர்கள் கலந்து கொண்டனர்.