திருப்பாவை இசைப் போட்டி
ADDED :3541 days ago
புதுச்சேரி: புதுச்சேரி ராமானுஜர் மடத்தில் திருப்பாவை இசைப் போட்டி நடந்தது. மகளிர் உலகம் சமூக நற்பணி இயக்கம் சார்பில், செயின்ட் தெரெஸ் வீதியில் உள்ள அரங்க ராமானுஜர் மடத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். பரிசளிப்பு விழாவிற்கு தாமோதரன் தலைமை தாங்கினார். ரமணா பைன் ஆர்ட்ஸ் அகடமி நிறுவனர் சூசைராஜ், சீனுமோகன்தாஸ் சிறப்புரையாற்றினர். பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூட இணை பேராசிரியர் கண்ணமங்கைக்கு சங்கீத செம்மல் விருது வழங்கப் பட்டது. ஏற்பாடுகளை கவிஞர் இளங்குயில், சங்கர், பழனியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர். ஓவியர் சிவக்குமார் நன்றி கூறினார்.