திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா
ADDED :3534 days ago
அவிநாசி: அவிநாசி குலாலர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழாவில், அம்பிகையுடன் எழுந்தருளிய சந்திரசேகரர் மற்றும் திருநீலகண்டருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், பஞ்சமூர்த்திகள் மற்றும், 63 நாயன்மார்களுக்கு அபிஷேக, ஆராதனை செய்விக்கப்பட்டது. அதன்பின், ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா வந்தார். பின், சிவனடியார்களுக்கு அமுது படைக்கப்பட்டது. பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுத்தேர்வில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற, குலால சமுதாய மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, குலாலர் கல்யாண மண்டப அறக்கட்டளை, மகளிர் அமைப்பு, குலாலர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மேற்கொண்டனர்.