உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவீதியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

திருவீதியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

சென்னை : அபிராமபுரம் திருவீதியம்மன் கோவிலின், மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. மந்தவெளி, அபிராமபுரம் திருவீதியம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகமும், அதைத் தொடர்ந்து, 165ம் ஆண்டு ஆடி மாத திருவிழாவும், விமர்சையாக நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை, கணபதி பூஜை, சங்கல்பம், நவக்கிரஹ ஹோமம், சாந்தி ஹோமம், தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு, யாகசாலை பூஜை, ரக்ஷாபந்தனம் ஆகியவை நடக்கிறது. ஆடி மாதத் திருவிழாவை முன்னிட்டு, நாளை (18ம்தேதி) காலை 5.30 மணிக்கு, சகலவேதா மூலமந்திர ஹோமம் நடக்கிறது. 19ம் தேதி,காப்பு கட்டுதல், சக்தி கரகம் ஊர்வலம் நிகழ்ச்சியும், 21ம் தேதி, பகல் 1.30 மணிக்கு, பக்தர்களுக்கு கூழ்ஊற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு, விநாயகர், முருகன், திருவீதியம்மனின், வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான, 22ம் தேதி பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளான பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், கரகாட்டம் நடக்கிறது. ஊர்த் தலைவர் சற்குணசேகர், கோவில் நிர்வாக அதிகாரி குமரேசன் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் எழில், முத்து ஆகியோர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !