உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மோகனூர்: பரளி கடக்கால்புதூர் செல்வ மாரியம்மன், செல்வ விநாயகர் கோவிலில், நாளை (பிப்., 19) கும்பாபிஷேக விழா நடக்கிறது. மோகனூர் யூனியன், பரளி பஞ்சாயத்துக்குட்பட்ட, கடக்கால்புதூர், செல்வமாரியம்மன், செல்வ விநாயகர், பகவதி அம்மன், மதுரைவீரன் மற்றும் நவக்கிரகங்கள் புதிதாக கட்டும் பணி துவங்கியது. அனைத்து திருப்பணிகளும் முடிந்த நிலையில், நாளை (பிப்., 19) கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதை முன்னிட்டு, நேற்று காலை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, மோகனூர் காவிரி ஆறு தீர்த்தம் எடுத்துவரப்பட்டு யாக பூஜை நடந்தது. இன்று (பிப்., 18) காலை, 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, யாக வேள்வி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை (பிப்., 19) காலை, 7 மணிக்கு செல்வ மாரியம்மன், செல்வ விநாயகர், பகவதி அம்மன், மதுரைவீரன் மற்றும் நவக்கிரகங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !