போஜனம்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :3716 days ago
வடமதுரை: வடமதுரை பேரூராட்சி போஜனம்பட்டியில் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 21ம் தேதி துவங்கியது. அம்மன் கரகம் பாலித்து வாணவேடிக்கையுடன் கோயில் வந்ததும், பொங்கல் வைத்தல் போன்ற வழிபாடுகள் நடந்தது. மூன்றாம் நாளான நேற்று மாலை முளைப்பாரி, மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலைக்கு கொண்டு செல்லப்பட்டது.