மதுரையில் ரசிகர்களை அசத்தியபெருமாளே நாடகம்
ADDED :3666 days ago
மதுரை: மதுரையில் நடக்கும் தமிழ் இசை விழாவில் மதுவந்தி தயாரிப்பில் உருவான பெருமாளே என்ற குடும்ப நகைச்சுவை நாடகம் ரசிகர்களை கவர்ந்தது.தமிழ் இசை சங்கம் சார்பில் 41ம் ஆண்டு தமிழ் இசை விழா ராஜா முத்தையா மன்றத்தில் நடக்கிறது. நேற்று ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசை கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்களின் நாத சங்கமம் நடந்தது. இதன்பின் மதுவந்தி, சுரேஷ்வர் நடித்த பெருமாளே என்ற நகைச்சுவை நாடகம் நடந்தது. பக்தர் ஒருவரின் பிரதிபலன் இல்லாத கடவுள் பக்தியை சோதிப்பதற்காக பூலோகத்திற்கு வந்த கடவுள், அவர் சந்திக்கும் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட எழுதப்பட்ட நாடகம் ரசிகர்களை அசத்தியது. நகைச்சுவை வசனமும் ரசிகர்களை கவர்ந்தது. மதுரையில் 103 முறையாக இந்நாடகத்தை இக்குழு நடத்தியது.