நெல்லை டவுன் கிருஷ்ணன் கோயிலில்கோகுலாஷ்டமி உற்சவம் துவக்கம்
ADDED :5161 days ago
திருநெல்வேலி:நெல்லை டவுன் சந்தான கோபால நவநீத கிருஷ்ணசுவாமி கோயிலில் கோகுலாஷ்டமி உற்சவம் நேற்று துவங்கியது.நெல்லை டவுன் அப்பர்தெரு சந்தான கோபால நவநீத கிருஷ்ணசுவாமி கோயிலில் கோகுலாஷ்டமி மகோத்ஸவம் நேற்று துவங்கியது. காலையில் அபிஷேகம், சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனைகளும் நடந்தது. மாலையில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது.31ம் தேதி வரை கோகுலாஷ்டமி உற்சவம் நடக்கிறது. 28ம் தேதி ருக்மணி கல்யாணமும், 31ம் தேதி ஆஞ்சநேய மஹோத்ஸவமும் நடக்கிறது.ஏற்பாடுகளை விழாக்கமிட்டியார் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.