திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம்
ADDED :3483 days ago
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மனும் சுவாமியும் வீதியுலா வந்தனர். முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனும் சுவாமியும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பெரிய தேரில் சுவாமியும் பிரியாவிடை தாயாரும் எழுந்தருள, மற்றொரு தேரில் சவுந்தர நாயகியம்மன் எழுந்தருளினார். பொதுமக்கள் வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்தது.தேர் நிலைக்கு வந்தவுடன் அம்மனுக்கும் சுவாமிக்கும் தீபாராதனை காட்டப்பட்டது.