பகவதியம்மன் கோயில் பங்குனி திருவிழா
ADDED :3523 days ago
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை வைத்தியநாதரபும் பகவதியம்மன் கோயில், பங்குனி திருவிழா நடந்தது. பத்து நாட்கள் நடந்த திருவிழாவில் அம்மன் சிம்மம், ரிஷபம், யானை உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்தார். பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் தீச்சட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்திருந்தனர்.