உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் கோவி லில், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்  நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில்  உள்ள நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண மஹோற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி மூலவர் ரங்கநாதர்  பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலையில் மணமக்கள் கோலத்தில் எழுந்தருளிய நித்ய கல்யாணப் பெருமாள் – ரங்கநா யகி தாயாருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில்  நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைத்தம்பி ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !