அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் திருவிழா துவக்கம்
தேனி: தேனி அருகே அல்லிநகரம் பனசலாறு வீரப்ப அய்யனார் கோயில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி காலை 7.25 மணிக்கு வீரப்ப அய்யனார், சர்வ அலங்காரத்துடன் அல்லிநகரம் கோயில் வீட்டிலிருந்து புறப்பட்டு, மதியம் 12.10 மணிக்கு மலைக்கோயிலை சென்றடைந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை முடிந்து 12.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடந்தது. இரவு 8 மணிக்கு மேல் சுவாமி நகர் வலம் வந்தார். இரவு 10 மணிக்கு மேல் பூக்குழி உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.10 மற்றும் 12ல் காவடிகளுக்கு கலசம் கட்டுதல் , 13 மாலை 4.45 மணிக்கு மின் விளக்கு அலங்காரத்துடன் தேனி பங்களா மேட்டில் அமைந்துள்ள சோலைமலை முருகன் கோயிலுக்கு காவடியுடன் செல்லுதல், 14ல் காலை 7.25 மணிக்கு வீரப்ப அய்யனார் சுவாமி காவடியுடன் குதிரை வாகனத்தில் புஷ்ப அலங்காரத்தில் புறப்பாடாகி மலையடிவாரத்தில் உள்ள வீரப்ப அய்யனார் கோயில் சென்றடைதல் நிகழ்ச்சி நடக்கிறது. 16ல் மறுபூஜை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுமதி தலைமையில் அல்லிநகரம் கிராமக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.