மணக்குள விநாயகர் கோவில் யானை ’லட்சுமி’க்கு கஜ பூஜை
ADDED :3515 days ago
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு நேற்று கஜ பூஜை நடந்தது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்ததையடுத்து, ஒரு ஆண்டாக, கோவில் யானை லட்சுமிக்கு கஜ பூஜை நடத்தப்படாமல் இருந்தது. கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், நேற்று காலை கோவில் யானை லட்சுமிக்கு கஜ பூஜை நடந்தது. அதையொட்டி, யானை லட்சுமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, கோவிலுக்குள் அழைத்து வரப்பட்டு, காலை 8:30 மணிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், யானைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.