ஆன்லைனில்..மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாண நுழைவுச்சீட்டு!
ADDED :3518 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாண விழாவிற்கான நுழைவுச்சீட்டிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏப்., 19 ல் நடக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பங்கேற்க இலவச மற்றும் கட்டண நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. கட்டணங்கள் ரூ.200, ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டுகள் ஏப்., 6 முதல் ஏப்., 15 வரை கோயில் இணையதள முகவரியில் www.madurai meenaksi.org விண்ணப்பித்து பெறலாம். பெயர், முகவரி, ஆதார் அட்டை உள்ளிட்ட விபரங்களை இதில் பதிவு செய்ய வேண்டும்.