சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் பிரம்மோற்சவ விழா ஏப்.8ல் துவக்கம்
ADDED :3518 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் 11 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ பங்குனி திருவிழா ஏப்.,8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை 10.00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. ஏப்.,14ல் ஸ்ரீதேவி, பூதேவியருடன் நாராயணன் சுவாமி திருக்கல்யாண நடக்கிறது. ஏப்.,15ல் ராமஜெனனம் உற்சவம், ஏப்.,17 மாலை புஷ்பயாகம், ஏப்.,18ல் மாலை உற்சவசாந்தி, விடையாற்றி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி லதா செய்து வருகிறார்.