ஐஸ்வரியம் பெருகும்!
ADDED :3871 days ago
மகாவிஷ்ணு, பூமாதேவியை பெண் பார்க்க வந்ததும், திருமணம் முடிக்க வந்ததும் திருவோண நட்சத்திரத்தில்தான். இதன் அடிப்படையில் கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தில் திருவோண பூஜை சிறப்பாக நடக்கிறது. அன்று சுவாமிக்கு சாம்பிராணி தூபம் காட்டப்படுகிறது. பின் அகண்ட நெய்தீபம் வால் தீபம் ஏற்றி, அதில் மகாலட்சுமியை எழுந்தருளச் செய்து சுவாமிக்கு தீபாராதனை செய்கின்றனர். இந்த தீப தரிசனத்தைப் பார்த்தால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.