உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானுடமும் அவதாரமும்!

மானுடமும் அவதாரமும்!

நாமும் பூமியில் பிறக்கிறோம். கடவுளும் அவதாரம் எடுக்கிறார். இருவர் பிறப்பும் ஒன்றாகாது. நாம் நம் கர்ம வினையினால் பிறக்கிறோமே தவிர, நம் விருப்பப்படி அல்ல. இறைவனோ கருணையினால் அவதாரம் செய்கிறான்! எங்கே, எப்படித் தோன்றவேண்டுமோ அப்படித் தோன்றுகிறான். மலையிலிருந்து உருட்டினால் ஒருவன் புரண்டு கீழே வருகிறான். மற்றொருவன் படிப்படியாக இறங்கி நடந்து வருகிறான். முன்னவனைப்போல நாம் பிறக்கிறோம் பின்னவனைப்போல இறைவன் வருகிறான். மேலேயிருந்து உருட்டி விட்டால் காயம் உண்டாகும் அல்லவா! நமக்கு இந்தக் காயம் (உடம்பு) ஊழ்வினை உருட்டி விட்டதால் வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !