பெரியமாரியம்மன் கோவிலில் அன்னதானம்
ADDED :3519 days ago
ஈரோடு: திருவிழாவுக்காக இடம் மாற்றம் செய்யப்பட்ட அன்னதான திட்டம், பெரியமாரியம்மன் கோவிலில் மீண்டும் தொடங்கியது. ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம் தேர்த்திருவிழா, கடந்த, மூன்றாம் தேதி மறுபூஜையுடன் நிறைவு பெற்றது. இந்த மூன்று கோவில்களில், பெரிய மாரியம்மன் கோவிலில் மட்டும் அன்னதானம் திட்டம் செயல்படுகிறது. இங்கு இட பற்றாக்குறை உள்ளது. இதனால் திருவிழா பூச்சாட்டு தொடங்கியவுடன், சின்ன மாரியம்மன் கோவிலுக்கு மாற்றப்பட்டது. தற்போது விழா நிறைவு பெற்றுள்ளது. இதனால் நேற்று முன்தினம் முதல், பெரிய மாரியம்மன் கோவிலில் அன்னதானம் திட்டம், மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.