அலங்காநல்லுார் கோயில் விழா
ADDED :3484 days ago
அலங்காநல்லுார்: அழகாபுரியில் வரதராஜபெருமாள், செல்லாயி அம்மன், நாணல்குளம் கருப்புசுவாமி, அய்யனார் சுவாமி கோயில் முதல் நாள் பங்குனி திருவிழாவில் மஞ்சமலை சுவாமிக்கு கனி மாற்றி நாணல்குளம் கருப்புசாமிக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். இரவு செல்லாயி அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து மாவிளக்கு எடுத்தனர். நேற்று முளைப்பாரி கரைத்து அய்யனார், கன்னிமார் குதிரைகள் பூஞ்சோலை கொண்டு சேர்த்ததும் மஞ்சள் நீராடினர்.