உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழா: காப்புகட்டிய பக்தர்கள்!

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழா: காப்புகட்டிய பக்தர்கள்!

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர். இக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் ஏப்., 20ல் நடந்தது. திருவிழா மே 10ல் துவங்கி மே 17ல் முடிகிறது. பக்தர்கள் அம்மனுக்கு ஆயிரம் கண்பாணை, அக்னிச்சட்டி , பால்குடம் எடுத்தல், அங்கபிரதட்சணம் செய்தல் போன்ற நேர்த்திகடன் செலுத்துவது வழக்கம். அதற்காக நேற்று ஏராளமானோர் காப்பு கட்டி விரதம் துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !