உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபாவளியன்று ஏழுமலையானை தரிசிக்க 4 நாளில் முடிந்த பதிவு!

தீபாவளியன்று ஏழுமலையானை தரிசிக்க 4 நாளில் முடிந்த பதிவு!

ராஜபாளையம் : தீபாவளி அன்று ஏழுமலையான் தரிசனத்திற்கான பதிவு, ராஜபாளையம் திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் நான்கு நாட்களில் முடிந்தது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில், திருப்பதி ஏழுமலையான் தரிசனம் மற்றும் அறை வசதிக்கு முன்பதிவு நடைபெறுகிறது. தரிசனம் செய்ய வேண்டிய நாளில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன் இங்கு பதிவு துவங்கும். அதன்படி அக்.,26 தீபாவளியன்று, திருப்பதியில் சுவாமி தரினம் மற்றும் அறை ஒதுக்க, ஆக., 26ல் பதிவு துவங்கியது. இதன் பதிவு நான்கே நாட்களில் முடிந்தது. இ-தர்ஷன் மையத்திற்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் மற்றும் அறை வசதி முடிந்துவிட்டதால், திருப்பதி சென்று தான் தீபாவளி தரிசனத்திற்கு பதிவு செய்ய முடியும். அதுவும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !