பட்டத்தரசி அம்மன் கோவில் விழா: சிம்ம வாகனத்தில் திருவீதியுலா
ADDED :3434 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பட்டத்தரசி அம்மன், மதுரை வீரன் கோவில் பூச்சாட்டு விழாவையொட்டி திருவீதியுலா நடந்தது. நிகழ்ச்சியையொட்டி தினமும் காலை, மதியம், இரவு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, அம்மன் அழைப்பு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, ஜோதிபுரம் விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகங்கள், மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. பி ன், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. ஜோதிபுரம் தண்டு மாரியம்மன் கோவிலில் இருந்து மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் முளைப்பாரி ஏந்தி, மாவிளக்குடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். சிம்ம வாகனத்தில் பட்டத்தரசி அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஞ்சள் நீராட்டுடன், விழா நிறைவடைந்தது.