உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சையம்மன் கோவில் தேர்‚ தீமிதி விழா

பச்சையம்மன் கோவில் தேர்‚ தீமிதி விழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த காடியார் கிராமத்தில் ஸ்ரீ மன்னாத ஈஸ்வர பச்சையம்மன் கோவிலில் தேர்‚ தீமிதி விழா நடந்தது. திருக்கோவிலுார் அடுத்த காடியார் கிராமத்தில் பழமையான ஸ்ரீ மன்னாத ஈஸ்வர பச்சையம்மன் கோவில் உள்ளது. இதில் ஆண்டு பெருவிழா நடந்தது. விழாவின் 9ம் நாளான நேற்று முன்தினம் தேர்‚ தீமிதி விழா நடந்தது. காலை 9:00 மணிக்கு வள்ளிதேவ சேனா சமேத முருகர்க்கு சிறப்பு அபிேஷகம்‚ அலங்காரம்‚ திருக்கல்யாண வைபவம் நடந்தது. மதியம் 1:30 மணிக்கு முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்‚ பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தேரை வடம்பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். தேர் நிலையை அடைந்தவுடன் மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !