உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மைவாடி மாரியம்மன் கோவில் திருவிழா

மைவாடி மாரியம்மன் கோவில் திருவிழா

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே, மைவாடி மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது. வரும் ஜூன் 2ம் தேதி வரை நடக்கிறது. மடத்துக்குளம் அருகேயுள்ள மைவாடி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் நாளை (24ம்தேதி) இரவு, 1:00 மணிக்கு திருக்கம்பம் நடுதல், பூவோடு வைத்தல், 25ம் தேதி அம்மனுக்கு 18 வகையான அபிேஷகம் நடைபெறும். மே 31ம் தேதி இரவு, 7:00 மணிக்கு சக்திகும்பம் எடுத்தல், தீர்த்த அபிேஷகம், ஜூன் 1 ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாணம், மாவிளக்கு, பூவோடு, சிறப்பு ஆராதனை, 2ம் தேதி மதியம், 3:00 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல், திருத்தேரோட்டம், மஞ்சள் நீராடுதல், மகா அபிேஷகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, இந்து அற நிலையத்துறையினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !