திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்ட கொடியேற்றம்
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கான விநாயகர் கொடியேற்றம் நேற்று காலையில் நடந்தது. தமிழகத்தின் மிகப்பெரிய தேரினை கொண்ட சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆனித்தேரோட்டம் பிரசித்திபெற்றதாகும். இந்த ஆண்டு ஆனித்தேரோட்டம் வரும் ஜூன் 19ம் தேதி நடக்கிறது. இந்த தேரோட்டதிற்கான விநாயகர் கொடியேற்றம் நேற்று காலையில் நடந்தது.கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில் விநாயகருக்கு அபிசேகமும், மாலையில் உள்வீதி உலாவும் நடந்தது. வரும் ஜூன் மாதம் வரையிலும் நெல்லையில் விழாக்கோலம் பூணுகிறது. வரும் 29ம் தேதியன்று நெல்லையப்பர் கோயிலில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் திருவீதி உலா நடக்கிறது. நெல்லையப்பர் கோயிலில் இந்த ஆண்டு நடப்பது 5012வது தேரோட்டமாகும். இதையொட்டி தேரோட்ட விழாவிற்கான ஏற்பாடுகள், தேரினை சுத்தப்படுத்தி அழகுப்படுத்தும் பணிகளும் துவங்கவிட்டன.