உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநாங்கூர் பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி வைபவம்!

திருநாங்கூர் பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி வைபவம்!

திருநாங்கூர்: எந்நாட்டவருக்கும் இறைவனாய், பரப்பிரம்ம மூர்த்தியாய் விளங்கும் சிவபெருமான், நமது தென்னாட்டில், பலாசவனம் என்றும், மதங்காஸ்ரமம் என்றும் வழங்கப்படும் திருநாங்கூரில், பன்னிரு பீடங்களில் எழுந்தருளி, ஸ்ரீமதங்க மஹரிஷிக்கு, ரிஷப வாஹனத்தில் காட்சி கொடுத்த வைபவம், பல நூற்றாண்டுகளுக்குப்பிறகு அருட்பெருஞ்ஜோதியான சிவபெருமானின் தனிப்பெருங்கருணையால், 11.6.2016 சனிக்கிழமை அன்று, திருநாங்கூர் என்னும் மகோத்தம தலத்தில், கீழ்கண்ட நிகழ்ச்சி நிரல்படி நடைபெற உள்ளது.

பன்னிரு பீட சிவ திருத்தலங்கள்-திருநாங்கூர்:

1. தத்புருஷ பீடம்-ஸ்ரீமதங்கீஸ்வர சுவாமி திருநாங்கூர்
2. அகோரபீடம்-ஸ்ரீஆரண்யேஸ்வர சுவாமி திருக்காட்டுப்பள்ளி
3. வாமதேவ பீடம்- ஸ்ரீயோகநாத சுவாமி திருயோகீஸ்வரம்
4. சத்யோஜாத பீடம்- ஸ்ரீசொர்ணபுரீஸ்வர சுவாமி காத்திருப்பு
5. சோம பீடம்- ஸ்ரீஜூரஹரேஸ்வர சுவாமி திருநாங்கூர்
6. சார்வ பீடம்- ஸ்ரீநாகநாத சுவாமி செம்பதனிருப்பு, அல்லிவிளாகம்
7. மகாதேவ பீடம்- ஸ்ரீநம்புவார்க்கன்பர் சுவாமி திருநாங்கூர்
8. பீமபீடம்- ஸ்ரீகைலாசநாத சுவாமி திருநாங்கூர்
9. பவபீடம்- ஸ்ரீசுந்தரேஸ்வர சுவாமி திருமேனிக்கூடம், திருநாங்கூர்
10. பிராண பீடம்- ஸ்ரீஐராவதேஸ்வர சுவாமி பெருந்தோட்டம்
11. ருத்ரபீடம்- ஸ்ரீகலிக்காமேஸ்வர சுவாமி அன்னப்பன் பேட்டை
12. பாசுபத பீடம்- ஸ்ரீநயனவரதேஸ்வர சுவாமி நயனிபுரம், மேல்நாங்கூர்.

நிகழ்ச்சி நிரல்:

11.6.2016 (சனிக்கிழமை)
காலை: 8.00 மணிக்கு- ஸம்வத்ஸராபிஷேக பஞ்சாக்ஷர மஹாயாகம்.
11.00 மணிக்கு- பூர்ணாஹூதி, கலசாபிஷேகம், மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல்.
மாலை: 6.30 மணிக்கு மேல் 8.00 மணிக்குள்- பன்னிரு தெய்வத்திருமேனிகளுக்கும் சமகாலத்தில் திருக்கல்யாணம் செய்விக்கப்பட்டு, திவ்யதம்பதிகள் ரிஷபாரூடத்தில் காட்சி தரும் வைபவம் நடைபெறும். பிறகு மஹாதீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல்.
இரவு: 9.00 மணிக்கு மேல்- பன்னிரு ரிஷபாரூட மூர்த்திகளும், வேத பாராயணம், திருமுறை பாராயணங்கள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க, வானவேடிக்கையுடன், திருவீதியுலா வரும் நிகழ்வு நடைöறும்.

தொடர்புக்கு: திருமதி. ரு. சுதா ஆய்வாளர்-பொறையார்-அவர்கள்
திரு. மா.கோபி,செயல் அலுவலர் அவர்கள்
திரு. மு.முருகையன், செயல் அலுவலர்  அவர்கள்

மல்லிகார்ஜூனா சேவா டிரஸ்ட்,
42,பி, தெற்கு தெரு, காயத்ரி நகர், அஸ்தினாபுரம், சென்னை-64.
போன்: 98400 64911, 98406 60435, 97909 98037.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !