உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் ஏழுமலையான் தரிசனம்!

ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் ஏழுமலையான் தரிசனம்!

திருப்பதி: திருமலை ஏழுமலையானை, ஒரு லட்சம் பேர், தரிசனம் செய்தனர். கோடை விடுமுறை முடிவடைய உள்ளதால், திருமலை ஏழுமலையானை, தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், நேற்று முன்தினம், ஒரு லட்சம் பேர், ஏழுமலையானை தரிசனம் செய்தனர். 69 ஆயிரம் பக்தர்கள், தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். இதுவே, இந்த ஆண்டில் பெரிய பதிவு என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். காளஹஸ்தீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் மட்டும், 5,000 ராகு - கேது பரிகார பூஜை நடந்தது. நான்கு மணி நேரம் வரை காத்திருந்து, 45 ஆயிரம் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !