ஏழுமலையான் உண்டியலில் திருட முயன்ற பெண்ணுக்கு சிறை
ADDED :3451 days ago
திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியலில் திருட முயன்ற பெண்ணுக்கு, ஆறு மாத சிறை தண்டனை விதித்து, திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டது. திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆந்திர மாநிலம், குண்டக்கலை சேர்ந்த பத்மாவதி என்ற பெண், ஒப்பந்த ஊழியராக பணி புரிந்து வந்தார். இவர், கடந்த பிப்., 2ம் தேதி, பக்தர்கள் உண்டியலில் போட்ட, 3,000 ரூபாயை திருடினார். இதை, கண்காணிப்பு கேமரா மூலம் கண்ட அதிகாரிகள், போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். பத்மாவதியை கைது செய்த போலீசார், திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். திருப்பதி கூடுதல் நீதிமன்ற நீதிபதி, குற்றத்தை ஒப்பு கொண்டதால் அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.