மகுடஞ்சாவடி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3429 days ago
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே, உலகப்பனூரில் உள்ள காளியம்மன் கோவில், 17 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் கிடந்தது. இந்த நிலையில், கடந்த ஓராண்டாக, கோபுரம் அமைத்தல் மற்றும் சுவர் எழுப்பும் வேலை நடந்தது. காளியம்மன், சிங்க வாகனம், விநாயகர், மூஞ்சூரு போன்ற சுவாமி சிலைகள் புதிதாக வடிவமைத்து, பிரதிஷ்டை செய்தனர். நேற்று காலை, 10.50 மணியளவில், காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.