ஆதி விநாயகர் கோவில் ஆண்டு விழா
ADDED :3572 days ago
கருமத்தம்பட்டி: சின்ன மோப்பிரிபாளையம் ஆதி விநாயகர் கோவிலில் ஆண்டு விழா நடந்தது. கருமத்தம்பட்டி அடுத்த சின்ன மோப்பிரிபாளையம் ஆதி விநாயகர் கோவிலில், 12ம் ஆண்டு விழா நடந்தது. காலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, ஆதி விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.