உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோலியனுார் புத்துவாயம்மன் கோவில் தேர் திருவிழா

கோலியனுார் புத்துவாயம்மன் கோவில் தேர் திருவிழா

விழுப்புரம்: கோலியனுார் புத்துவாயம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. விழுப்புரம் அடுத்த கோலியனுார் புத்துவாயம்மன் கோவில் தேர்   திருவிழா கடந்த 9ம் தேதி, துவங்கியது. இதனையடுத்து நாள்தோறும் இரவு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 6.30 மணியளவில்   புத்துவாய், ரேணுகாதேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தேரில் எழுந்தருள செய்தனர். பின், தேரோடும் வீதிகள்   வழியாக பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர். ஒன்றிய சேர்மன் விஜயாசுரேஷ்பாபு, துணை சேர்மன் வளர்மதி, ஒன்றிய கவுன்சிலர்   லட்சுமிராமசாமி, ஊராட்சி தலைவர்கள் திலகம், முருகன், செந்தில்குமார், கமலா பெருமாள், முன்னாள் அறங்காவலர் அண்ணாமலை, முன்னாள்   ஊராட்சி தலைவர் திலகவதி தெய்வசிகாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இன்று தெப்பல் உற்சவம், திருவிளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !